தெலுங்கானா என்கவுண்ட்டர்: கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த் கருத்து


தெலுங்கானா என்கவுண்ட்டர்: கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த் கருத்து
x
தினத்தந்தி 6 Dec 2019 1:47 PM IST (Updated: 6 Dec 2019 2:13 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் என்கவுண்ட்டர் தொடர்பாக கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளையும், போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர். அவர்கள் தப்பி செல்ல முயன்ற போது, இந்த சம்பவம் நடந்தது.

என்கவுண்ட்டரில் குற்றவாளிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கூறும்போது, 

எல்லோருக்கும் நியாயமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது. 

நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனை கிடைத்திருந்தால் சரியானது. என்கவுண்ட்டர் தான் இதற்கு தீர்வா? எனவும் கேள்வி எழுகிறது என்று கூறினார்.

தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

"பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும்" என்றார்.

Next Story