உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2019 8:59 AM GMT (Updated: 6 Dec 2019 8:59 AM GMT)

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

இடஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டு மறுவரையறைகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.

மேலும் 9 மாவட்டங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தநிலையில் சேலத்தில்,  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும். விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளோம்.  உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்று அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறும் வகையில் கடுமையாக உழைப்போம்.

தேர்தல் தோல்வி பயத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016ல் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. தற்போதும் தடை வாங்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story