உள்ளாட்சித் தேர்தல்: பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி


உள்ளாட்சித் தேர்தல்: பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி
x
தினத்தந்தி 7 Dec 2019 5:35 PM IST (Updated: 7 Dec 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறும்போது, 

"உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை.  புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தவிர்க்கப்படுகிறது. 

9 புதிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும். நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Next Story