2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினி தான் கூற வேண்டும் - ப.சிதம்பரம் பேட்டி


2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினி தான் கூற வேண்டும் - ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:38 AM IST (Updated: 8 Dec 2019 11:38 AM IST)
t-max-icont-min-icon

2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினி தான் கூற வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி அன்றாட கூலி தொழிலாளிகளின் வருமானம் பாதியாகிவிட்டது. மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக உள்ளது. 

7 மாதங்களுக்கு முன் மிகப்பெரிய வெற்றியை தந்த மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி-யை மேலும் உயர்த்தினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். 2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினிதான் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story