மாநில செய்திகள்

“பெண்களை பூத்து குலுங்க விடுங்கள்” மேடையில் கண் கலங்கிய தமிழிசை சவுந்தரராஜன் + "||" + tamilsai Soundararajan on the stage with a disturbing eye

“பெண்களை பூத்து குலுங்க விடுங்கள்” மேடையில் கண் கலங்கிய தமிழிசை சவுந்தரராஜன்

“பெண்களை பூத்து குலுங்க விடுங்கள்” மேடையில் கண் கலங்கிய தமிழிசை சவுந்தரராஜன்
பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை கோயம்பேட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, ஒரு ஆண் பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும். புன்கையுடன் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புகிறாள் என்றால் அது நடக்காத விஷயமாக இருக்கிறது.

கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என கூறி விட்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கிறார்கள். 

தயவு செய்து பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள் அதனை ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள்.

பெண்கள் அடுப்பு முன்பு வேகக்கூடாது என்பதற்காக பிரதமர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் பெண்களையே எரித்து உள்ளனர். கருணையே இல்லாதவர்களுக்கு கருணை காட்டக்கூடாது. 

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது” தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்
‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.
2. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது என சமய மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் சவுந்தரராஜன் பேசினார்.
3. வரலாறுகள் மறைக்கப்படுகின்றன தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
வரலாறுகள் மறைக்கப் படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.
4. ‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடு இந்தியா’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக இந்தியா உள்ளது’ என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன்
அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.