மாநில செய்திகள்

ஆபாச படம் பார்த்து,போலீசில் சிக்கிய வாலிபர் - எச்சரிக்கை செய்த போலீசார் + "||" + A young man caught watching a movie

ஆபாச படம் பார்த்து,போலீசில் சிக்கிய வாலிபர் - எச்சரிக்கை செய்த போலீசார்

ஆபாச படம் பார்த்து,போலீசில் சிக்கிய வாலிபர் - எச்சரிக்கை செய்த போலீசார்
செல்போனில் ஆபாச படம் பார்த்த வாலிபரை போலீசார் ஒருவர் எச்சரிக்கை செய்து ஆடியோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள மருதகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கு, போலீஸ்காரர் ஒருவர் போன் செய்து பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமீபத்தில் வலை தளத்தில் வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய போலீஸ்காரர்,  நீங்கள் ஆபாச இணையதளத்தில் குழந்தைகள் ஆபாச காட்சியை டவுன்லோடு செய்து பார்த்துள்ளீர்கள்.

அரசு சார்பாக அது குற்றம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் நீங்கள் பார்த்ததால் உங்களுக்கு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அதன் பிறகும் நேற்று நீங்கள் பார்த்ததால் இப்போது எச்சரிக்கை செய்து பேசுகிறோம். இது சட்டப்படி குற்றம் என்று பேசுகிறார்.

அதற்கு பதில் அளித்த வாலிபர் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ்காரர் அந்த வாலிபரை மன்னித்து விடுவது போல் ஆடியோ முடிவடைகிறது.