குளச்சல் கடல் பகுதியில் நேற்றிரவு முதல் நிற்கும் அடையாளம் தெரியாத கப்பல்
குளச்சல் கடல் பகுதியில் நேற்றிரவு முதல் அடையாளம் தெரியாத கப்பல் நிற்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார், சர்வதேச நீர்வழித்தடத்தின் அருகே இருப்பதால் குளச்சல் கடல்பகுதிக்கு இயந்திரக் கோளாறு காரணமாக தவறி வந்த கப்பலா அல்லது ஆய்வு கப்பலா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கப்பல் எதற்காக இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story