வெங்காயம் கிலோ ரூ.50... முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்
திருவள்ளூரில் வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கி சென்றனர்.
திருவள்ளூர்
வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வெங்காய் விலை உயர்வை குறிப்பிட்டு ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருவள்ளூரில் நேதாஜி சாலையில் ஆந்திர மாநில வியாபாரி ஒருவர் இரண்டு கிலோ வெங்காயத்தை ரூபாய் 100-க்கு விற்பனை செய்துள்ளார். இதனால் முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
வேனில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தபடி 2 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்றதும் பெரியவர் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வயதான முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் வீட்டில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
விற்பனைக்கு வந்த அரை மணிநேரத்தில் வேனில் இருந்த மொத்த வெங்காயமும் விற்று தீர்ந்தது என்று வெங்காய வியாபாரி மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story