மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது - ரஜினி மக்கள் மன்றம்


மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது - ரஜினி மக்கள் மன்றம்
x
தினத்தந்தி 10 Dec 2019 7:34 AM GMT (Updated: 2019-12-10T13:04:34+05:30)

மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்  சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story