உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உள்ளாட்சித் தேர்தல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சித்தேர்தல் நடப்பதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும். வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story