எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு


எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது-  அமைச்சர் செல்லூர் ராஜு
x
தினத்தந்தி 12 Dec 2019 2:31 PM IST (Updated: 12 Dec 2019 2:31 PM IST)
t-max-icont-min-icon

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும், இதயத்திற்கு நல்லது. முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்தார். மேலும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது, எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தமிழக அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக ஆட்சி காலத்தில் தான் வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை இருந்தது. அடுத்து வரும் நாட்களில் தமிழகத்திலேயே 25,000 மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.

தற்போது வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும் என கூறினார்.

Next Story