மாநில செய்திகள்

மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court to issue report on Jan 2, demanding beautification of Mamallapuram

மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு; ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாமல்லபுரத்தை அழகுப்படுத்த கோரிய வழக்கு தொடர்பாக ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி நீதிபதி கிருபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 1-ம் தேதி கடிதம் எழுதினார். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்கக்கூடாது. குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்தபட்சம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். 

மேலும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் வழங்கியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த விசாரணையின் போது மாமல்லபுரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட விவரங்களை ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  

இதற்கு அரசு சார்பில் அவகாசம் கோரிய நிலையில்,  வரும் ஜனவரி 2-ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முழு ஊரடங்கையொட்டி மாமல்லபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸ் கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி மாமல்லபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2. மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிப்பு தொல்லியல் துறை அறிவிப்பு
மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையாளர்கள் கண்டுகளிக்க 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
3. மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்
மாமல்லபுரம் அயல்நாட்டு மதுக்கடையில் மதுபிரியர்கள் குவிந்தனர்.
4. விதிகளுக்குப் புறம்பாக மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டி கட்டிடம்: ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி அபராதம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
விதிகளுக்குப் புறம்பாக மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டி கட்டிடம் கட்டிய ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
5. மாமல்லபுரத்தில் தமிழக முதல்வரின் 160 அடி நீள மணல் சிற்பம் - சிற்பக்கலைஞர்கள் வடிவமைப்பு
மாமல்லபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பத்தை சிற்பக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.