உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 16,360 பேர் வேட்புமனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 16,360 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2019 5:15 PM GMT (Updated: 12 Dec 2019 5:17 PM GMT)

உள்ளாட்சி தேர்தலையொட்டி இதுவரை 16,360 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற ஊரக பகுதிகளுக்கு வருகிற 27 மற்றும் 30–ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9–ந் தேதி தொடங்கியது. முதல் நாளில், 3,217 பேரும், 2–வது நாளில் 1,784 பேரும், 3–வது நாளில் 16,654 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

3–வது நாளான இன்று 16,360 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதாவது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12,701 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3,107 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 503 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 49 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் சேர்த்து இதுவரை, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 27,927 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 8,990 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,017 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 81 பேரும் என மொத்தம் 38,015 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தகவலை மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story