வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன் திருடிய 2 பேர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 3:40 AM IST (Updated: 13 Dec 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 66). இவர் கடந்த 8-ந்தேதி தன்னுடைய மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீடு கிரகபிரவேசத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்றுமுன்தினம் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு செல்போன் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

கைது

இதுகுறித்து ரத்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த மடிக்கணினி மற்றும் செல்போன் திருடியது சேலம் மாவட்டம் அம்மாப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (வயது 25), அரக்கோணத்தை சேர்ந்த யுவராஜ் (19) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மடிக்கணினியை கைப்பற்றி அவர்களிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story