மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின் + "||" + Corruption by using M-Sand in Chennai Corporation - DMK leader Stalin

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்(M-sand) பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றுமணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட்  கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகை மணலின் சந்தை விலை 30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை,  ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை - கோவை இடையே 68 சிறப்பு ரெயில்கள் ; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள 68 சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
3. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை கனமழை கொட்டியது.
4. சென்னையில் இன்று பரவலாக மழை
சென்னையின் சில பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
5. சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாதவர் செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை; மு.க.ஸ்டாலின்
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத முதல் அமைச்சர், செல்வாக்கு பற்றி பேசுவது பெரிய நகைச்சுவை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.