மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Rainfall in coastal districts - Chennai Meteorological Department

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழை நீரில் மிதந்த காய்கறிகள்
திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் காய்கறிகள் மிதந்தன. ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
2. மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது
மழை, வெள்ள பாதிப்பால் வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி உள்ளது.
3. மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’
இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’ வில் முடிந்தது.
4. தானே, பால்கர் மாவட்டங்கள் கடும் பாதிப்பு மும்பையில் எங்கும் மழை வெள்ளம் சூறைக்காற்றால் போர்க்களமான சாலைகள்
மும்பை, தானே, பால்கரில் 3-வது நாளாக கொட்டி தீர்த்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சூறைக்காற்றால் பல சாலைகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
5. திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பருவமழை சரியாக பெய்யவில்லை. கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.