அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 14 Dec 2019 7:55 AM GMT (Updated: 14 Dec 2019 7:55 AM GMT)

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது;-

“கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தர்மபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தமிகத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை 43 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story