மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்டம் நடத்த முயற்சி + "||" + Assam youth tried to hold protest in Chennai Marina

சென்னை மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்டம் நடத்த முயற்சி

சென்னை மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்டம் நடத்த முயற்சி
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த முயன்ற அசாம் மாநில இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல்குளம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீசார் இளைஞர்களின் போராட்டத்தைத் தடுத்தனர்.

உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்த முடியாது என்றும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை போலீசார் எச்சரித்தனர். 

இதனையடுத்து அங்கு கூடியிருந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் வள்ளுவர் கோட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது வள்ளுவர் கோட்டத்தில் வைத்து போராட்டம் நடத்தி வரும் அவர்கள் இன்று மாலை வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது
சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. தூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
தூத்துக்குடியில் இன்சூரன்சு நிறுவனம் முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
3. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டம்
கல்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், அந்த கிராம பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. அடிப்படை வசதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம்
மடத்துப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
5. ஈரானில் போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது
ஈரானில் அரசு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக இங்கிலாந்து தூதர் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை