மாநில செய்திகள்

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு + "||" + Free laptop for students; Order to deliver within tomorrow

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு

மாணவர்களுக்கு நாளைக்குள் இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு
12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களிடம் போனஃபைட் சான்றிதழ் பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாதவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட பிறகு, கூடுதலாக தேவைப்பட்டால் டிசம்பர் 17 க்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
2. ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை
ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் 2 நாளில் காலி செய்ய வேண்டும்- ஐ.ஐ.டி. உத்தரவால், மாணவர்கள் கவலை
சென்னை ஐ.ஐ.டி. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் 2 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
4. 10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
10-ம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
5. மத்திய பிரதேசத்தில் சிக்கி தவித்த நவோதயா பள்ளி மாணவர்கள் 17 பேர் காரைக்கால் வந்தனர்
மத்திய பிரதேசத்தில் சிக்கி தவித்த நவோதயா பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் நேற்று அதிகாலை பாதுகாப்பாக காரைக்கால் வந்தனர்.