பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது


பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 15 Dec 2019 12:36 PM GMT (Updated: 15 Dec 2019 1:00 PM GMT)

பொங்கல் பண்டிகையொட்டி அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது.

சென்னை, 

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள்  சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக பஸ், ரெயில்களில் லட்சக்கணக்கான மக்கள் செல்வார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி போகி பண்டிகை, 15-ந் தேதி பொங்கல், 16-ந் தேதி திருவள்ளுவர் தினம், 17-ந் தேதி உழவர் தினம் ஆகியவை வருகிறது. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆன்-லைன் மற்றும் கவுண்டர்களில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகள்பெற்று வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைப்படுவது குறித்தும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Next Story