மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி + "||" + Citizenship Act has no impact on Indian people - Chief Minister Palanisamy

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்  என்று  தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருக்கிறது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் வலியுறுத்தி உள்ளேன், இந்த நிலைபாட்டில் உறுதியாக உள்ளோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி-வெளிநடப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன..
2. குடியுரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்கு; காங்கிரஸ் வலியுறுத்தல்
குடியுரிமை சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
3. குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைப்பு
குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் துலேயில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தினர்.
4. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: 22-ந்தேதி விசாரணை
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
5. குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி
குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை மாயாவதி நீக்கி உள்ளார்.