போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பியது இந்திய குடியுரிமை துறை


போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பியது  இந்திய குடியுரிமை துறை
x
தினத்தந்தி 24 Dec 2019 4:06 AM GMT (Updated: 24 Dec 2019 4:06 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது.

சென்னை,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 19 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த மாணவரும் பங்கேற்று, அரசை விமர்சித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்த இந்திய குடியுரிமை துறை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பியது.

Next Story