தமிழக சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழக சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 5:58 AM GMT (Updated: 24 Dec 2019 7:07 AM GMT)

தமிழக சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இது 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது.  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்  6-ம் தேதி கவர்னர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.  

கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து  6-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Next Story