இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2019 12:06 PM GMT (Updated: 2019-12-24T17:36:07+05:30)

இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு கொடுத்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது.  குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும், அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story