உத்தரபிரதேசத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிராக பா.ஜ.க. சூழ்ச்சி; கட்சி தலைமை கண்டனம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை,
உத்தரபிரதேசத்தில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான மக்கள் போராட்டங்களில் தொடர்புடைய சம்பவங்களில் தங்களின் ஆதரவாளர்களை தவறாக குற்றம்சாட்டி இயக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மத்திய செயலகம் கண்டிக்கிறது.
லக்னோவில் கைது செய்யப்பட்ட மாநில தற்காலிக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் வசீம் அகமது மற்றும் உறுப்பினர்கள் காரி அஸ்பாக், முகமது நதீம் ஆகியோர் மீது தற்போது தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வன்முறைக்கு பின்னுள்ள சூத்திரதாரிகளாக ஊடகத்தின் முன் காட்டப்படுகின்றனர். அனைத்து அசம்பாவித சம்பவங்களின் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளதாக மாநில துணை முதல்-மந்திரி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதை தொடர்ந்து காவல்துறையின் இந்த செயல்பாடு அமைந்ததாக தெரிகிறது.
அரசியல் பழிவாங்கலை மாநில அரசாங்கம் நிறுத்தி, அனைத்து பொய் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று, கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாநில அரசாங்கத்தை மத்திய செயலகம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story