பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் ; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் ; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Dec 2019 2:26 PM GMT (Updated: 26 Dec 2019 2:26 PM GMT)

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

நாட்டில் துன்புறுத்தலில் இருக்கும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான தொலைபேசி அவசர சேவையை வழங்கி வரும் சைல்டுலைன் என்ற அமைப்பு, நாட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடத்திலும், தமிழகம் மற்றும் மராட்டியம் முறையே 2வது மற்றும் 3வது இடங்களிலும் உள்ளன.

இதன்படி கேரளாவில் 1,742 புகார்களும், தமிழகத்தில் 985 புகார்களும் மற்றும் மராட்டியத்தில் 443 புகார்களும் பதிவாகி உள்ளன என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அ.தி.மு.க. ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள்  அலட்சியம் காட்டினாலும், காவல் துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்! என தெரிவித்து உள்ளார்.

Next Story