திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் -ப.சிதம்பரம் டுவிட்


திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் -ப.சிதம்பரம் டுவிட்
x
தினத்தந்தி 26 Dec 2019 3:28 PM GMT (Updated: 2019-12-26T20:58:31+05:30)

திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை, முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்  திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என  முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மூன்று ஆண்டுகள் கழிந்து தாமதமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக/காங்கிரஸ் ஏனைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அஇஅதிமுக விற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளில் திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story