சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் குடும்பத்துடன் முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார்


சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் குடும்பத்துடன் முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார்
x
தினத்தந்தி 27 Dec 2019 7:51 AM GMT (Updated: 2019-12-27T13:21:02+05:30)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரிசையில் காத்திருந்து முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்.

சேலம்,

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் முதல்வர் பழனிசாமி, தனது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று  தனது வாக்கினை பதிவு செய்தார்.  

Next Story