சிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் ரெடி


சிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல்  ரெடி
x
தினத்தந்தி 27 Dec 2019 8:43 AM GMT (Updated: 2019-12-27T14:13:11+05:30)

சிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் சென்னை மற்றும் கோவை காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

மத்திய உள்துறை அளித்த பட்டியலின் அடிப்படையில் சிறார் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை அறிவித்து அதற்கான பணிகளில் இறங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட இணைய முகவரிகளில், குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருப்பதாக கண்டறிந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், சிறார்  ஆபாச படம் தொடர்பாக, சென்னை காவல் துறைக்கு, 40 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று கோவை மாவட்டத்துக்கு 30 பேர் கொண்ட பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது. 

சிறார் ஆபாச படத்தைப் பகிர்ந்ததாக,  கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற நபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.  

Next Story