செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 28 Dec 2019 5:58 AM GMT (Updated: 28 Dec 2019 5:58 AM GMT)

செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன என சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்லாட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு  முதலிடம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழகத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து மத்திய அரசு வழங்கி உள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி இது.

தமிழக முதலிடம் பெற உழைத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி.

தமிழக அரசை குறை கூறுவதுதான் மு.க.ஸ்டாலினின் வழக்கம். 

உள் நோக்கத்துடன்  உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது. 

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்களே தீர்மானிப்பார்கள்.

மோடி உரையை பள்ளியில் வந்து பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. வீட்டில் டிவி இல்லாதவர்கள் பள்ளிக்கூடம் வந்து மோடி உரையை பார்க்கலாம். கட்டாயமில்லை. விருப்பப்பட்டால் மட்டுமே பள்ளிக்கு  வரலாம் என கூறப்பட்டு உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும், மாநிலத்தில் திமுக அரசு இருந்தபோதும் என்பிஆர் கொண்டு வரப்பட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டுமே பின்பற்றப்படுகிறது. தேசிய குடியுரிமை பதிவேடு பயன்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறி உள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களை குழப்புகிறார்கள். செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன.

நடப்பாண்டில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளோம்.

மின் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

Next Story