குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிரமாண்ட பேரணி


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 28 Dec 2019 7:35 AM GMT (Updated: 2019-12-28T13:05:49+05:30)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

சென்னை,

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம்  அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்தி வருகின்றன.

சென்னை ஆலந்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story