மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் + "||" + 2 thousand cubic feet of water discharge from Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்,

கர்நாடகாவில் கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் நிறைந்தது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறக்கப்பட்டது.  இந்நிலையில், பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது.  இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது.

அணையில் நீர்இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், அணைக்கு நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது.  நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.
2. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
4. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.