மாநில செய்திகள்

9 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது + "||" + Re-voting began at 9 polling stations

9 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

9 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குச்சாவடி, உள்ளாட்சி தேர்தல், மறு வாக்குப்பதிவு தொடங்கியது
மதுரை,

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இதில் ஒருசில பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி 9 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியம் விலங்கல்பட்டு கிராம ஊராட்சி 4–வது வார்டு 242 ஏவி வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர், நாலுமாவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு 67ஏவி, 68 ஏவி, 69 ஏவி, 70 ஏவி, 71 ஏவி வாக்குச்சாவடிகள், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தாணிகோட்டகம் கிராம ஊராட்சி 2–வது வார்டு 119–வது வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், உப்புக்கோட்டை கிராமம், கிராம ஊராட்சி 8–வது வார்டு 52 ஏவி வாக்குச்சாவடி, மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 91–வது வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை  நடைபெறுகிறது. இந்த தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...