சேலம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு


சேலம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2020 8:07 AM GMT (Updated: 2 Jan 2020 8:07 AM GMT)

சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை
 
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள்  பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு.  315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:-

* தஞ்சை பூதலூர் ஒன்றியம் 2-வது வார்டு, மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் முதல் வார்டு, சிவகங்கை கண்ணங்குடி ஒன்றியம் முதல் வார்டில் அம‌முக வேட்பாளர்கள் வெற்றி

* கன்னியாகுமரி : கிள்ளியூர் ஒன்றியம் 1வது வார்டில் பாஜக வேட்பாளர் மோகன்தாஸ் வெற்றி

* மதுரை : திருமங்கலம் ஒன்றியம் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் முருகன் வெற்றி

*  சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றம் . அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எண்ணிக்கையில் முகவர்கள் வந்ததாக புகார் எழுந்தது. திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* ஆரணியில் ஒன்றிய 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் கவிதா காமராஜ் வெற்றி.

* திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.

* பட்டுக்கோட்டை ஒன்றியம் 2-வது வார்டில் திமுக வேட்பாளர் மாரியாயி பன்னீர்செல்வம் வெற்றி

* திண்டுக்கல் : கொடைக்கானல் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி.

* அரியலூர் : செந்துறை ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் கீதா வெற்றி  

* சேலம் : தலைவாசல் ஊராட்சி ஒன்றிய 2-வது வார்டில் பாமக வேட்பாளர் வெற்றி

* தஞ்சை ஒன்றிய 2-வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

* ராமநாதபுரம் : நயினார்கோவில் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் இளவரசி வெற்றி.

* தூத்துக்குடி : சாத்தான்குளம் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

* நாமக்கல் : பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 1 மற்றும் 2-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

Next Story