புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை மந்தம்!! கடந்த ஆண்டை விட குறைவு!


புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை மந்தம்!! கடந்த ஆண்டை விட குறைவு!
x
தினத்தந்தி 2 Jan 2020 9:56 AM GMT (Updated: 2 Jan 2020 9:56 AM GMT)

புத்தாண்டில் டாஸ்மாக்கில் மது விற்பனை மந்தமாக இருந்து உள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவு.

சென்னை:

தமிழ்நாட்டில்  5,152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 1,872 பார்கள் உள்ளன. 2018-19ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசாங்கம் ரூ.31, 157 கோடி வருமானத்தை ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச்சேரி  உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்கப்படும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம்.

டாஸ்மாக்கில்  சராசரியாக, வார நாட்களில் ரூ. 70-75 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் வசூல் ரூ. 90 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். தீபாவளி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், விற்பனை புள்ளி விவரங்கள் பொதுவாக ரூ.100 கோடியைக் கடக்கும் என கூறுகிறது.

அதற்கு ஏற்றபடி கடந்த டிசமபர் 31 ந்தேதி காலையில் இருந்து தமிழகத்தில் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று ₹ 150 கோடி மதிப்புள்ள மதுபானங்களை விற்றது. அதற்கு ஒரு நாள் முன்பு, டிசம்பர் 30 அன்று, சில கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது மதுபானம் ரூ.92 கோடிக்கு  விற்பனையாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டில், டாஸ்மாக் மதுபான  விற்பனை டிசம்பர் 31 அன்று 130 கோடி ரூபாயைத் தொட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி, விற்பனை எண்ணிக்கை ரூ. 113 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் விற்பனை ஓரளவு குறைவாக விற்பனையாகி உள்ளது என டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.  உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் காரணமாக இது தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை மந்தமாக இருந்து உள்ளது. வாக்குப்பதிவு பகுதிகளில் கடைகள் மாலை தாமதமாக மட்டுமே திறக்கப்பட்டன. 

இந்த ஆண்டு டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ந்தேதி  வருமானம் ரூ. 242 கோடியாக இருந்தது.  2018 ஆம் ஆண்டில் ரூ.243 கோடியாக இருந்தது.  அதற்கு ஒரு வருடம் முன்பு, 2017 ல் வருவாய் ரூ. 230.52 கோடியாக இருந்தது.

Next Story