8:00 மணி நிலவரம்: அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல்லில் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரின் மகன் யுவராஜ் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பதவிகள் | அ.தி.மு.ககூட்டணி | தி.மு.க. கூட்டணி | மற்றவர்கள் |
மாவட்ட கவுன்சிலர் | 134 | 162 | 0 |
ஒன்றிய | 967 | 1177 | 82 |
ஆதாரம்: தந்தி டிவி
சென்னை,
* ஏற்காடு செம்மநத்தம் பஞ்சாயத்தில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக ஆதரவாளர் வெற்றி பெற்றதாக கூறப்பட்ட நிலையில்,திடீரென அதிமுக ஆதரவாளர் வெற்றி என அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக ஆதரவாளர்கள் தேர்தல் அலுலவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
* சேலம் தளவாய்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு பெட்டியை காணவில்லை என திமுகவினர் புகார் அளித்தனர்.
* 8 -வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு பெட்டி மாயமானதாக தேர்தல் அலுவலரிடம் திமுகவினர் கடும் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
* திமுகவின் ரஞ்சிதம் வெற்றி பெற்றதாக தெரிவித்த நிலையில், திடீரென அதிமுகவின் சரோஜா வென்றதாக அறிவிக்கப்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
* மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக மஞ்சுளா தேர்வு செய்யப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் மஞ்சுளாவும் அவரை எதிர்த்து போடியிட்டவரும் 409 சமான வாக்குகள் பெற்றனர். இதனையடுத்து வாக்குகள் சமன் ஆனதால் குலுக்கல் முறையில் மஞ்சுளா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் செல்லப்பாண்டி திடீரென மயங்கி சாய்ந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
* தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை ஒன்றியம் வேப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவராக 25 வயது இளைஞர் சிவராஜன் வெற்றி பெற்றார்.
* பழனி ஊராட்சி ஒன்றியம் கோதைமங்களம் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் வெற்றி பெற்றார்.
* பழனி ஊராட்சி ஒன்றியம் தாதநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கண்ணகி வெற்றி பெற்றார்.
* நாமக்கல் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் நடுக்கொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அழகப்பனிடம் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
* கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய 4 வது வார்டில் பால்தங்கம் (பாஜக) - ஜெனிட்டா(காங்.) தலா 1251 ஓட்டுகள் பெற்றுள்ளனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
* கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் பன்னிமடை ஊராட்சி மன்ற தலைவராக ரத்தினம் வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story