உள்ளாட்சித் தேர்தல் : முன்னாள் ஊராட்சி தலைவரின் இரண்டு மனைவிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டு மனைவிகள் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த தனசேகர் என்பவர் தனது இரு மனைவிகளோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.
முன்னாள் உள்ளாட்சி தலைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவிகளான செல்வி வழூர் கிராமத்திலும், காஞ்சனா கோவில் குப்பத்திலும் கிராமத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பிற மாவட்ட விவரங்கள்:-
* கிருஷ்ணகிரி: 14-வது வார்டில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், 5 மணி நேரத்திற்கு பிறகு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
* தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெள்ளச்சாமி என்பவர் 484 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* பழனி மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் நாகேஸ்வரி வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story