ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வாக்கு எண்ணிக்கை


ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2020 2:27 AM GMT (Updated: 3 Jan 2020 2:38 AM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பல்வேறு இடங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது

சென்னை,

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கரூர் உள்பட 9 மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story