பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு ; வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று தினங்களாக ஏறுமுகத்திலேயே உள்ளது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.39 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும் உள்ளது. கடந்த மூன்று தினங்களில் பெட்ரோல் விலை சுமார் 27 காசுகளும், டீசல் விலை 42 காசுகளும் உயர்ந்துள்ளன.
ஈரான் - அமெரிக்கா மோதலால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரும் எனக்கூறப்படுவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story