தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு


தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு
x
தினத்தந்தி 5 Jan 2020 3:39 AM IST (Updated: 5 Jan 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்தது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் (டிசம்பர்) இருந்து உயர்வை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் அதிரடியாக விலை அதிகரித்து ஒரு பவுன் மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 815-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை மீண்டும் உயர்ந்து இருந்தது. கிராமுக்கு ரூ.17-ம், பவுனுக்கு ரூ.136-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 832-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 656-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து கொண்டே வந்தது. ஆனால் நேற்று விலை குறைந்து இருந்தது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.51-க்கும், ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

Next Story