பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகள் 10-ந்தேதி திறந்திருக்கும் தமிழக அரசு உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகள் 10-ந்தேதி திறந்திருக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பொது வினியோகத்திட்ட ரேஷன் கடைகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு 10-ந் தேதி (இரண்டாம் வெள்ளிக்கிழமை) வாராந்திர விடுமுறை நாளாகும். ஆனால் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் 10-ந்தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. வேலை நாளாக அறிவிக்கப்பட்ட 10-ந்தேதிக்கு பதிலாக, வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story