கவர்னர் உரையை தி.மு.க. புறக்கணித்தது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரையை தி.மு.க. புறக்கணித்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நிகழ்த்தப்பட்ட கவர்னர் உரையை, தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அதுபற்றி அவைக்கு வெளியே நிருபர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-
கவர்னர் உரையை தி.மு.க. புறக்கணிப்பதற்கு காரணம், தமிழகத்தில் கடன் தொகை 4 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று அமைச்சரவை தீர்மானம் போட்டு இதே கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் அதுபற்றி இதுவரையில், கவர்னரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.
இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை அ.தி.மு.க. ஆதரித்திருக்கிறது. அதனால் அந்த திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையமும், காவல்துறையும், அரசு நிர்வாகமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக செயல்பட்டிருக்கின்றன. புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அந்த வட்டாரத்தில் உள்ள எம்.எல்.ஏ. ஆகியோர் மேடையில் இருந்த ஒரு அரசு அதிகாரியை கீழ்த்தரமாக பேசியுள்ளனர்.
“தி.மு.க.வை நீ வெற்றி பெற வைத்து விட்டாய், நாங்கள் சொன்னதுபோல நீ கேட்கவில்லை” என்று ஆபாசமான வார்த்தைகளால் பேசி, அவரை இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தமிழக அரசு திடீரென்று, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு போட்டிருக்கிறது. இதே சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தோமே, அது என்னவாயிற்று? இரண்டு ஆண்டுகளாக அதைப் பற்றி எதுவும் கவலைப்படவில்லை.
இது ஒரு பெரிய கபட நாடகம். அனிதா உள்ளிட்ட 7 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்கள். இப்போது புதிதாக ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றுவதற்காக தொடங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டிக்கும் வகையில்தான் ஆளும் கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கவர்னர் உரையை நாங்கள் புறக்கணிக்க முடிவெடுத்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தேய்பிறை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஒரு புள்ளிவிவரம் தருகிறேன். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் எம்.பி.க்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உங்களுக்கு தெரியும். இப்போது 24 எம்.பி.க்களாக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் சட்டமன்றத்திலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 89-ல் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 1,007 ஒன்றிய கவுன்சிலர்கள் இருந்தோம். அது இந்த உள்ளாட்சி தேர்தலில் 2,100 ஒன்றியக் கவுன்சிலர்கள் என உயர்ந்திருக்கிறது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 30 மாவட்ட கவுன்சிலர்கள் என்ற எண்ணிக்கை தற்போது 243 என்று அதிகரித்திருக்கிறது. இது தேய்பிறையா?, வளர்பிறையா? என்ற கேள்வியை உங்கள் முடிவிற்கும், அந்த அமைச்சரின் முடிவிற்கும் விட்டு விடுகிறேன்.
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடந்ததாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் எடப்பாடியினுடைய பள்ளிக்கூடத்தில் அந்த தேர்தல் விதிமுறைகளை படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அந்த பழனிசாமி, இந்த எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டு நடந்திருக்கிறார். டெல்லியில் நடந்த மாணவர்கள் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். அதில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி கூறியதாவது:-
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் பல பிரிவினருக்கு மோசமான நிலை ஏற்படவுள்ளது. இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை.
இங்கு யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகத்தையே கடைபிடிக்க வேண்டும். ஹிட்லர் போல ஆள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வை கண்டித்து சட்டமன்றத்தில் கவர்னர் உரையை புறக்கணித்து வெளியேறியிருக்கிறேன். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே குடியுரிமை திருத்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இதுதொடர்பாக அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை முதல்-அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஆளுங்கட்சி அ.தி.மு.க. வாக்களித்ததை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய மக்களும் அதை விரும்ப மாட்டார்கள்.
இந்த மதசார்பற்ற நாட்டில், குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும், இலங்கையில் இருந்து இங்கே குடியேறியிருக்கும் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அதன் முடிவை மாற்றி, அவர்களுக்கும் அந்த வாய்ப்பை தரவேண்டும் என்று வலியுறுத்தி நான் வெளிநடப்பு செய்திருக்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வளர்பிறையா?, தேய்பிறையா?
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

Related Tags :
Next Story