சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு


சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 5:00 AM IST (Updated: 7 Jan 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டு தோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Next Story