நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது ; தமிழகத்தில் பாதிப்பில்லை


நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது ; தமிழகத்தில் பாதிப்பில்லை
x
தினத்தந்தி 8 Jan 2020 7:40 AM IST (Updated: 8 Jan 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

புதுடெல்லி,

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன.

 இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி  பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதால் குமரியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேனி வழியாக கேரளாவிற்கு செல்லும் பஸ்களும் குமுளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் பெரும்பாலான பஸ்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பல தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் - புதுச்சேரி இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கம் போல், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுவதால்,  மக்களின் இயல்பு வாழ்க்கையில்  பாதிப்பு இல்லை. 

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் பாதிக்கப்படும். இதனிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story