1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு ​​தொகுப்பு - நியாய விலைக்கடைகளில் இன்று விநியோகம்


1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு ​​தொகுப்பு - நியாய விலைக்கடைகளில் இன்று விநியோகம்
x
தினத்தந்தி 9 Jan 2020 8:02 AM IST (Updated: 9 Jan 2020 8:02 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, இன்று முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

சென்னை,

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில்  வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால், குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் 'பாஸ்வேர்டு' அடிப்படையில், 12ந் தேதி வரை இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றதை உறுதி செய்யும் வகையில், அந்தந்த நியாய விலைக்கடைகளில் உள்ள ஒப்புதல் படிவத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


Next Story