வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகமாக பெய்துள்ளது- வானிலை மையம்


வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகமாக பெய்துள்ளது- வானிலை மையம்
x
தினத்தந்தி 9 Jan 2020 7:43 AM GMT (Updated: 9 Jan 2020 7:43 AM GMT)

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகமாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை​யும், காலையில் பனிப்பொழிவும் நிலவும். வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் முழுமையாக விடைபெறும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகமாக பெய்துள்ளது” என்றார்.

Next Story