சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும் -முதல்-அமைச்சர் பழனிசாமி


சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும் -முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 9 Jan 2020 1:52 PM IST (Updated: 9 Jan 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை

சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது  கூறியதாவது:-

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 838 கிலோ தங்கம்  வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும்.  வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்படும். 

ரூ.2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தேவைப்படும்  இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

ரூ.407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளது என கூறினார்.

Next Story