செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கான தனிபிரிவு தொடங்கப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர்


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கான தனிபிரிவு தொடங்கப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 9 Jan 2020 5:45 PM IST (Updated: 9 Jan 2020 5:45 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலை காயத்திற்கான தனிபிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

அப்போது அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையும் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விரைவில் தலை காயத்திற்கான தனிபிரிவு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story