போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு கேரள டி.ஜி.பி. அறிவிப்பு
தமிழக–கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருவனந்தபுரம்,
தமிழக–கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலையாளிகளின் புகைப்படங்களை கேரள போலீசார் வெளியிட்டு உள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு தகுந்த பரிசு வழங்கப்படும் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா அறிவித்து உள்ளார். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
தகவல் தெரிவிக்க வேண்டிய போன் எண். 0471–2722500 மற்றும் செல். 9497900999.
Related Tags :
Next Story