பெங்களூருவில் கைதான 3 பயங்கரவாதிகள் பற்றி திடுக்கிடும் தகவல்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த தனி அமைப்பு தொடங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த தனி அமைப்பு தொடங்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அம்பத்தூரில் 2014-ம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம் மற்றும் கடலூரைச் சேர்ந்த காஜாமுகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளிவந்த அவர்கள் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவரும் பெங்களூருவை சேர்ந்த சிலருடன் சேர்ந்து பயங்கர சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மேற்கண்ட 3 பேருக்கும் உதவி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய மூவரை தமிழக கியூ பிரிவு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 பேர் பற்றியும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த பெங்களூருவில் தனி அமைப்பு தொடங்கி செயல்பட்டுள்ளனர். இவர்களில் முகமது சையத் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் இதற்காக கம்ப்யூட்டரில் தனி சாப்ட்வேர் வடிவமைத்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த விசாரணையின்போது இவர்களை பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story